வித்தகபுர உதைபந்து கிண்ண தொடர் – இறுதி போட்டியில் பிரதம அதிதியாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

Sunday, September 29th, 2024

வித்தகபுரம் கண்ணகி விளையாட்டுக் கழகத்தின் 13ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வலிகாமம் வடக்கு வலயத்திற்குட்பட்ட 26 விளையாட்டு கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  இறுதிப்போட்டிக்கு தெரிவான இளவாலை சென்யூட், மாதகல் ஐக்கிய விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே இன்று (29) மாலை இளவாழை மெய்கண்டான் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, போட்டிக்குத் தெரிவான இரு அணிகளுக்கும் கட்சி நிதியிலிருந்து தலா 50 ஆயிரம் ரூபாவை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
000


Related posts: