வாகன விபத்தில் இரு வெளிநாட்டவர் பலி!

காலி – மாத்தறை பிரதான வீதியின் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு தம்பதி உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து இன்று மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ரஷ்ய நாட்டு தம்பதியினரே உயிரிழந்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய பஸ் வண்டி சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பஸ் வண்டி சாரதியை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை!
இலங்கை -ரஷ்யா தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்!
புதிய முறையில் மாகாண சபைத் தேர்தல்!
|
|