வரி விதிப்பு: முற்கூட்டியே தெரியப்படுத்துமாறு கோரிக்கை!
Thursday, July 6th, 2017
வரி விதிப்பு தொடர்பில் இலங்கையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களை முற்கூட்டியே தெரியப்படுத்துமாறு இலங்கையில் உள்ள ஜப்பானிய முதலீட்டாளர்கள் கோரியுள்ளனர்.
ஜப்பானிய வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த வேளையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, வரி அறவீட்டு மாற்றங்களால் இலங்கையில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்கின்றவர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆலோசனைக்கேற்ப பணியாற்றாவிடின் சட்ட நடவடிக்கை - நீதிபதி இளஞ்செழியன்
வீட்டுத்திட்ட பயனாளிகளுக்குகான காசாலையை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
நாளைமுதல் வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு அனைத்து விமான நிலையங்களையும் மீள திறக்க நடவடிக்கை - இராஜாங்க ...
|
|