வடக்கு மாகாணத்திற்குள் நிர்க்கதியாக இருப்பவர்கள் நாளையதினம் தத்தமது சொந்த இடங்களுக்கு மீளவும் செல்ல முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, April 19th, 2020

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளை பேணுவதற்காக நாட்டில் நடைமுறையில் இருந்துவந்து ஊரடங்கு சட்டம் காரணமாக வடக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்கு இடையே சென்று மீளவும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பமுடியாதிருந்தவர்கள் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் தத்தமது சொந்த இடங்களுக்கு மீளவும் திரும்பிச் செல்ல முடியும் என கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் –

கடந்த ஒரு மாதகாதலமாக நாடுமுழுவதும் சுகாதார நடைமுறைகளை பேணுவதற்காக ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்துவந்தது.

இந்த நிலைமை காரணமாக வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலிருந்து தொழில் நிமிர்தமும் வைத்தியம் மற்றும் ஏனைய இதரபல தேவைகள் காரணமாகவும் குறித்த மாவட்டங்களிற்குள் சென்று மீளவும் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது நிர்க்கதி நிலையில் இருப்பவர்கள் நாளையதினம்(20) யாழ் மாவட்டத்தில் காலை 05 மணிமுதல் முன்னிரவு 08 மணிவரை ஊரடங்டகுச் சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் தத்தமது இடங்களுக்கு மீளவும் செல்லமுடியும்.

குறிப்பாக சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய இடர் வலயங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளிலுள்ளவர்கள் இதில் உள்ளடங்கப்படமாட்டார்கள் என்’பதுடன் நாளையதினம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் மக்கள் சுகாதார தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமைய தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சன நெரிசல்களை ஏற்படுத்ததாவகையில் செயற்பட்டு குறித்த கொரோனா தொற்றை முற்று முழுதாக எமது பகுதிகளிலிருந்து ஒழித்து இயல்பு நிலையை முழுமையாக கொண்டுவர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts: