வடக்கின் வளங்களை அந்தப் பிரதேச கடற்றொழிலாளர்களே பூரணமாக பயன்படுத்த நடவடிக்கைமேற்கொள்ளப்படுகிறது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, May 22nd, 2021

வடக்கில் இருக்கின்ற வளங்களையும் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளையம் அந்தப் பிரதேசத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களே பூரணமாக பயன்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த கடற்றொழிலாளர்கள் அதிக பொருளாதாரத்தை ஈட்டக் கூடிய வகையில் ஆழ்கடல் பலநாள் கலன்களை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவாதாகவும் அதனை பெற்றுக்கொள்ள விரும்பும் கடற்றொழிலாளரகளை கடற்றொழில் திணைக்களத்திடம் கோரிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.

இலங்கையின் தேசிய நாளிதள் ஒன்றுக்கு வழங்கிய நேரல்காணலின்போது  வடக்கு கடற்றொழிலாளர்கள் பெரும்பாலானோர் பாரம்பரிய தொழில் முறைகளையே பின்பற்றி வருவதாக கூறுப்படும் நிலையில் அவர்களுக்கு எவ்வாறான மாற்றுத் தொழில்களை ஏற்பாடு செய்ய முடியும்? என கேள்வியெழுப்பியிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

பாரம்பரிய தொழில் முறைகளை பயன்படுத்துகின்றவர்களினால் குறிப்பிட்டளவு தூரத்திற்கு அப்பால் சென்று மீன் பிடிக்க முடியாது. இதனால் அவர்களுக்கு குறிப்பிட்டளவு வளங்கள் மாத்திரமே கிடைக்கின்றது. அதனால் மட்டுப்படுத்தப்பட்டளவு வருமானத்தினையே பெற்றுக் கொள்ள முடியும்.

அதிக வருமானத்தினை பெற்றுக் கொள்ளக்கூடிய ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள வேண்டுமாயின் பல நாள் கலன்களில் அரேபியக் கடல் போன்ற ஆழ்கடல் பிரதேசத்திற்க சென்று மீன்பிடிக்க வேண்டும். அதற்கு வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு ஆழ்கடல் பலநாள் கலன்களும் அவற்றுக்கான பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். அதைத்தவிர, ஆழ்கடல் கலன்களை நிறுத்தக்கூடிய துறைமுகங்களும் உருவாக்கப்பட வேண்டும்.

தற்போது வடக்கில் ஆழ்கடல் பலநாள் கலன்கள் நிறுத்துவதற்கு மயிலிட்டித் துறைமுகம் மாத்திரமே இருக்கின்றது. கடந்த ஆட்சிக் காலத்தில் அரிசயல் நோக்கங்களுக்காக மயிலிட்டித் துறைமுகம் புனரமைக்கப்பட்ட போதிலும், அதனை வடக்கு கடற்றொழிலாளர்கள் பூரணமான பலனைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்;கொள்ளப்படவில்லை.

எனவே, எதிர்காலத்தில் வடக்கு பிரதேசத்தில் இருக்கின்ற வளங்களையும் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளையம் அந்தப் பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களே பூரணமாக பயன்படுத்தம் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், ஆழ்கடல் பலநாள் கலன்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்ற கடற்றொழிலாளரகளை கடற்றொழில் திணைக்களத்திடம் கோரிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளேன். விரும்புகின்றவர்களுக்கு வங்கிக கடன் வசதி செய்து கொடுக்கவுள்ளதோடு, தேவையான பயிற்சிகளையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்புக்களும் பெற்றுக் கொடுக்கப்படும்.

அதேபோன்று, சிறுதொழிலில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்கள் விரும்புவார்களாயின், அவர்களுக்கு கடலட்டை பண்ணைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கவுள்ளோம் என்றுமு; தெரிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: