யாழ். மாநகரசபையில் ஓய்வு நிலை வயதினை அண்மித்துள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

Friday, November 17th, 2017

யாழ். மாநகரசபையில் ஓய்வு நிலை வயதினை அண்மித்துள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்றைய வழங்கி வைத்துள்ளார்.

யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலர் எஸ்.இளங்கோவன், உதவிச் செயலர் ஏ.எக்ஸ்.செல்வநாயகம் புதிதாகப் பதியேற்றுள்ள யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆர்.ரி.ஜெயசீலன் மற்றும் உதவி ஆணையாளர் சீராளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ். மாநகரசபையில் கடந்த பத்துத் தொடக்கம் முப்பது வருடங்களாகச் சுகாதாரப் பணியாளர்களாக சேவையாற்றுபவர்களில் பத்துப் பேர் ஓய்வு வயதினை அடைந்துள்ள போதிலும் அவர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

பணியாளர்கள் தமது நிரந்தர நியமனத்தினை வலியுறுத்திப் பல தடவைகள் கடிதங்களை எழுதி அனுப்பிய போதிலும் அவர்கள் 45 வயதினைக்  கடந்திருந்தமையால் நியமனங்கள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மாநகர ஆணையாளர் விடுத்த வேண்டுகோளின் பேரில் வடமாகாண ஆளுநரின் விசேட அனுமதியுடன் நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

Related posts: