மூளையின் உதவியுடன் இயக்கக்கூடிய இசைக்கருவிகள்!

Monday, July 17th, 2017

மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் சமிக்ஞைகளின் ஊடாக இசைக்கக்கூடிய கருவி ஒன்றினை நரம்பியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். வாஷிங்டன் பல்லைக்கழகம் மற்றும் சுவீடனின் நியூரோ சயன்ஸ் நிறுவனம் என்பன இணைந்தே இதனை உருவாக்கியுள்ளனர்.

தமது உடல் அவயங்களை அசைப்பதற்கு சிரமப்படுபவர்கள் இலகுவாக பாவிப்பதற்காகவே இவ்வாறான இசைக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

மூளையின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் மின் சமிக்ஞைகளை அல்லது அலைகளை பதிவு செய்வதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்களின் பின்னர் இக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மூளையையும், கணனியையும் இணைக்கும் செயற்பாடுகள் கடந்த ஒரு தசாப்தமாக இடம்பெற்று வந்த நிலையில் இவ் இசைக்கருவி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: