மீன்பிடித்துறை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை!

2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் நன்னீர் மீன்பிடித்துறையில் பெறப்படும் உற்பத்திகளை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது நன்னீர் மீன்பிடித் துறையை விரிவுபடுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும், மீன் வளர்ப்பிற்குப் பொருத்தமான நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன்பிடித் தொழில்துறைக்குத் தேவையான மீன் குஞ்சுகளை விடுவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார் .
மழை காலங்களில் நீர் நிரம்பும் குளங்களில் நன்னீர் மீன்பிடித் தொழில்துறையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
நெருக்கடியானநேரத்திலும் நெருக்கமாக இருந்த தோழர் சந்திரமோகன்!
நுகர்வோர் நலன் கருதி அதிகார சபை விசேட நடவடிக்கை!
பயங்கரவாத இயக்கங்களை எதிர்கொள்ள சர்வதேச நாடுகளின் உதவி அவசியம்!
|
|