மாணவர்களுக்கான மடிக் கணினிகள் 2 மாதங்களுக்குள் வழங்கப்படும் – கல்வி அமைச்சர் அகில விராஜ்!

நாடு முழுவதிலும் உள்ள சகல பாடசாலைகளிலும் தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான வகுப்புக்களில் கற்கும் மாணவர்களுக்கு மடிக் கணினிகளை இரண்டு மாதங்களில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பன்னாட்டு ரீதியில் தற்போது கல்வி நடவடிக்கைகள் தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையிலும் கல்வி நடவடிக்கைகளை தொழில் நுட்ப ரீதியில் முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையின் கல்வித்துறை முன்னைய காலங்களை விடவும் பெரிய முன்னேற்றங்களை அடைந்து வரும் நிலையில், மேலும் அதனை விருத்தி செய்யும் வகையிலான செயல் திட்டங்களை அரசு, கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வி அமைச்சு என்பன இணைந்து முன்னெடுத்து வருகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளிலிருந்தும் இதற்கான உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன என்றார்.
Related posts:
|
|