மாணவனொருவனைத் தாக்கிய குற்றச் சாட்டில் யாழில் ஆசிரியர் கைது !

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரியொன்றின் ஆசிரியரொருவர் இன்று சனிக்கிழமை(01) மாணவனொருவனைத் தாக்கிய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
க.பொ. த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவனொருவன் வீட்டுப் பாடம் செய்து வரவில்லை என்ற காரணத்திற்காகக் குறித்த ஆசிரியர் மாணவனைத் தாக்கியதாக மாணவனின் தந்தை யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!
அரச நிறுவனங்களுக்கு புதிதாக சேவையாளர்களை இணைத்துக் கொள்வது தற்காலிகமாக இடை நிறுத்தம் - பிரதானிகளுக்...
சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலைக்கு விற்பனையாகும் அரிசி விற்பனை - விவசாய அமை...
|
|