மாகாணங்களுக்கு உள்ளான ரயில் சேவை நாளை ஆரம்பம் – முதலாம் திகதிமுதல் நாடுமுழுவதும சேவை நடைபெறும் என்றும் போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு!

நாளைமுதல் மாகாணங்களுக்கு உள்ளான புகையிரத சேவைகளுக்காக 133 புகையிரதங்களை ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இருப்பினும் ,நாளைமுதல் பருவகால பயணச் சீட்டை கொண்டுள்ள புகையிர பயணிகளுக்கு மாத்திரமே புகையிரத சேவைகள் இடம்பெறும் என்று புகையிரத திணைக்கள பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர கூறியுள்ளார்..
நாளை கொழும்புக்கு வரும் புகையிரதம் அளுத்கம, அவிசாவளை, அம்பேபுஸ்ச மற்றும் கொச்சிக்கடை வரையில் மாத்திரம் பயணிக்கும் என்று பொதுமுகாயைமாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயணத் தடை காரணமாக கடந்த சில மாதகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவை மாகாணங்களுக்குள் நாளை ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவை இடம்பெறாது என்றும் மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் முதலாம் திகதிமுதல் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|