மக்களின் விடிவுக்காகவே நாம் கட்சியைப் பலப்படுத்தி வருகிறோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Tuesday, February 28th, 2017

தமிழ் பேசும் மக்களின் நிரந்தர விடியலுக்காகவே நாம் பிரதேசங்கள் தோறும் எமது கட்சிக் கட்டமைப்புக்களை உருவாக்கி கட்சியை பலப்படுத்தி வருகின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு தேவா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் –

எழுபது ஆண்டு காலமாக பாரம்பரிய தமிழ்த் தலைமைகளை தமிழ் மக்கள் நம்பி ஏமாந்த வரலாறுகளே இங்கு எஞ்சியுள்ளது. பழைய தமிழ் தலைமைகளில் புதிதாக தொங்கிக் கொண்டிருப்பவர்களும் தமிழ் மக்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்தி வருகின்றார்கள்.

இனி இவர்களை நம்பிப் பயனில்லை என்றே மக்கள் தீர்மானம் எடுத்திருக்கின்றார்கள். தமது உரிமைகளை பெற்றுத்தருவதற்கான ஆற்றல் மிகு கரங்கள் யாரிடம் உண்டு என  மக்கள் இன்று உணரத்தொடங்கிவிட்டார்கள் .

மக்களின் உணர்வுகளுக்கும் அரசியல் அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்கும் நாம் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே எமது கட்சியை நாம் பலப்படுத்தி வருகின்றோம்.

கட்சியை கட்டமைப்பு ரீதியாக பலப்படுத்தும் கடமை எங்களுடையது. ஆனாலும் எம்மை அரசியல் ரீதியாக பலப்படுத்தும் வரலாற்றுக் கடமை தம்மிடமே உண்டு என்பதையும் மக்கள் இன்று உணரத் தொடங்கி விட்டார்கள்.

எமது கட்சியின் பலத்திலேயே தமிழ் பேசும் மக்களின் நிரந்தர விடியல் தங்கியுள்ளது. ஆகவே பலம் சேர்க்க வாருங்கள் என்றும் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரி அலன்ரின் (உதயன்)  கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்  கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாக செயலாளர் முரளி ஆகியோர்  கலந்துகொண்டனர்.

0002

Related posts: