மக்களின் தேவைகள் உரிய காலத்தில் தீர்த்துவைக்கப் படவேண்டும் – வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து.

Sunday, October 15th, 2017

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வவுனியா மாவட்ட அரச அதிபர் ரோகண புஸ்பகுமாரவிடம்  வலியுறுத்தியுள்ளார்.

வவுனியாவுக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் அம்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களின் பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்துகொண்டதன் அடிப்படையிலேயே அரசாங்க அதிபரை  மாவட்ட செயலகத்தில் சந்தித்து குறித்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் குறித்த சந்திப்பின்போது வவுனியா மகாரம்பைக்குளம் பகுதியில் நன்நீர் மீன்பிடி வளர்ப்பில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினை,  குடிநீர் பிரச்சினை, வரட்சி நிவாரணம் உள்ளிட்ட பல விடங்கள் ஆராயப்பட்டது.

இதன்போது கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், ஆகியோர் உடனிருந்தனர்

Related posts:

தமிழர் வாழ்விடங்கள் தோறும் புது மகிழ்ச்சி பொங்கிட தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் - வாழ்த்தச் செய்தி...
மறைந்தும் மறையாத ஒளிச்சுடர் மரிய சேவியர் அடிகளார் - அஞ்சலிக் குறிப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதான துறைமுக முகாமைத்துவ அத...