மகிழ்ச்சி குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் !

Tuesday, March 21st, 2017

2014 முதல் 2016 ஆம் ஆண்டுகாலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வின் அடிப்படையில், உலகில் மகிழ்ச்சி குறைந்துவரும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 120 ஆவது இடத்தில் உள்ளது.

மக்கள் ஏன் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்? எந்தளவு மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்பதை அடிப்படையாகக்கொண்டு உலக மகிழ்ச்சியை அறிக்கை தயாரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மகிழ்ச்சி தினமான மார்ச் 20 ஐ முன்னிட்டு இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலாம் இடத்தில் நோர்வே உள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் என்பன முறையே 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம் இடங்களில் உள்ளன. மேலும், 14 ஆம் இடத்தில் அமெரிக்காவும், 19 ஆம் இடத்தில் பிரித்தானியாவும், 122 ஆம் இடத்தில் இந்தியாவும் உள்ளதாக 2017 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: