மகனின் இரண்டு கால்களையும் அடித்து முறித்த தந்தை – மாங்குளத்தில் மதுபோதையில் அட்டகாசம்!

Monday, April 16th, 2018

மாங்குளம் – நீதிபுரத்தில் பகுதியில் மதுபோதையில் வீட்டுக்குவந்த தந்தை 11 வயதான தனது மகனை மூர்க்கத்தனமாகத் தாக்கி அவரது இரண்டு கால்களையும் அடித்து முறித்துள்ளார்.இந்தக் கொடூரம் இடம்பெற்றதாக மாங்குளம் பொலிஸார் கூறினார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நிறை போதையில் வந்த தந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை மூர்க்கத்தனமாக கையாலும், தடியாலும் தாக்கியதாக அயலவர்கள் கூறியுள்ளனர். இதனால் சிறுவனின் இரண்டு கால்களும் முழங்காலின் கீழே முறிந்தன. முகத்திலும் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அயலவர்களால் மீட்கப்பட்ட சிறுவன், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் மாங்குளம் பொலிஸார் சிறுவனைத் தாக்கிய தந்தையை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts: