பொன்சேகாவை எச்சரிக்கும் அரச தலைவர்கள்!

Monday, September 11th, 2017

அண்மையில் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அதிருப்பதி அடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

போர்க்குற்றம் மற்றும் எல்லே குணவன்ச தேரர் தொடர்பில் பொன்சேகா வெளியிட்ட கருத்தினால் தென்னிலங்கை அரசியல் சலசலப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

பொன்சேகாவின் கருத்துக்கு அரசியல் மட்டத்திற்கு அப்பால், பெரும்பான்மையின மக்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.இறுதிக்கட்ட போரின் போது போர்க்குற்ற நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டதாக பொன்சேகா தெரிவித்திருந்தார்.அத்துடன் எல்லே குணவன்ச தேரரையும் பகிரங்கமாக அவமதிக்கும் வகையில் பொன்சேகா கருத்து வெளியிட்டார்.

பொன்சேகாவின் கருத்துக்கு சமகால அரசாங்கத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமது எதிப்பினை வெளியிட்டுள்ளனர்.இதனால் அரசாங்கத்திற்கு ஏற்படுகின்ற அவமதிப்பை தவிர்த்துக் கொள்ள சரத் பொன்சேகாவினால் வெளியிடும் கருத்து அரசாங்கத்தின் கருத்தல்ல என அமைச்சர்கள் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.இதேவேளை, அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, இராணுவத்தினரை தண்டிப்பதற்கு தான் ஒருபோதும் இடமளிப்பதில்லை என குறப்பிட்டார்.இந்நிலையில் ஜனாதிபதியின் கூற்றுக்கு எதிர்மாறாக சரத்பொன்சேகா கருத்து வெளியிட்டு வருகின்றமையால், அரசாங்கத்திற்குள் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொன்சேகாவை கண்டிக்குமாறு அமைச்சர்கள் சிலர், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இவ்வாறான நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பொன்சேகாவை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதுடன் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறான கருத்து வெளியிட்டு அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தாமல், வாயை மூடிக்கொண்டிருக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளனர்.இதன்போது பொன்சேகா அமைதியை கடைப்பிடித்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: