புரவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீவிரம் – சுப்பர்மடம் கடற்றொழிலாளர் இறங்குதுறையை தூர்வாரி தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Saturday, December 5th, 2020

பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்றொழிலாளர் படகு இறங்குதுறையை தூர்வாரி தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.

சிலதினங்களுக்கு முன்னர் தாக்கிய புரவி சூராவளி காரணமாக சுப்பரமடம் கடற்றொழிலாளர் படகு இறங்குதுறைபகுதிக்குள் பெருமளவான மணலும் கடலடி களிவுப்பொருட்களும் குவிந்துள்ளதால் படகுகளை மீளவும் தொழிலுக்கு எடுத்துச்செல்லமுடியாத நிலையில் கடற்றொழிலாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் புரவி அனர்த்தம் காரணமாக முற்றாக கடற்றொழில் பாதிக்கப்பட்டமையால் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள கடற்றொழிலாளர்கள் மீண்டும் தமது தொழில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முன்னாயத்தங்களை மேற்கொண்டுவரும் நிலையில் குறித்த சுப்பர்மடம் கடற்றொழிலாளர் படகு இறங்குதுறை பகுதி படகுகளை எடுத்தச்செல்லமுடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையிலேயே குறித்த கடற்றொழிலாளர்கள் அந்த இறங்குதுறை பகுதியை தூர்வாரி தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்’ வழிநடத்தலில் புரவி சூறாவழியால் பாதிக்கப்பட்ட குடாநாட்டின் பல பகுதிகளில் இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்களுக்கு பல்வேறு அத்தியாவசிய உதவித்திட்டங்களையும்; தேவைப்பாடுகளையும் பெற்றுக்கொடுத்துவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர் மற்றும் பிரதேச நிர்வாக பொறுப்பாளர்கள் இன்றையதினமும் பல பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுகளையும் உணவுப் பொதிகளையும் வழங்கிவைத்துள்ளனர்.

குறிப்பாக வடமராட்சி, வலிகாமம், யாழ்ப்பாணம், நல்லூர், தீவகம் உள்ளிட்ட பகுதிகளில் இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்களுக்கு இன்றையதினம் பல்வேறு உடனடித் தேவைகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட மற்றும் பிரதேச  நிர்வாகத்தினர் வழங்கிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: