புகையிரத சாரதிகள் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்!

புகையிரத சாரதிகள் இன்று(05) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.
45 வயதை அண்மித்த 12 சாரதிகளை சேவைக்கு இணைத்துக் கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தமது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டால் பணிப்புறக்கணிப்பினை கைவிடுவதுதொடர்பில் ஆராயப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஓகஸ்ட் இறுதிவரை 2,200 இணையதள மோசடி முறைப்பாடுகள்!
அரசியலமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை 21 ஆம் திகதி!
சட்ட மருத்துவ அதிகாரி இல்லாததால் காத்திருந்து சடலத்தை பெறும் நிலை!
|
|