பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மருக்கு தடை!

Saturday, May 11th, 2019

பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் கிளப் அணியில் விளையாடி வரும் பிரேசில் நட்சத்திர வீரரான நெய்மருக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிரஞ்சு கோப்பை இறுதிப்போட்டியில் பெனால்டி சூட்அவுட் முறையில் பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணி, ரென்னெஸ் அணியிடம் தோல்வியடைந்தது. காயம் காரணமாக அப்போட்டியில் விளையாடாத நெய்மர், மைதானத்தில் ரசிகர்களுடன் போட்டியை பார்த்தார்.

இந்நிலையில், போட்டி முடிந்து மைதானத்ததை விட்டு வெளியேறும் போது ரசிகர் ஒருவரின் முகத்தில் நெய்மர் குத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நெய்மரின் தவறான நடத்தை காரணமாக பிரஞ்சு கால்பந்து கூட்டமைப்பு மூன்று போட்டிகள் விளையாட தடை விதித்துள்ளது.

Related posts: