பிரபல பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

Saturday, September 3rd, 2016

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையான உடுவில் மகளிர் கல்லூரிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலையில் தற்பொழுது பதவி வகித்துவரும் அதிபர் ஸ்ரீயானிக்கு ஆதரவு தெரிவித்தே மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (03) காலை 8.30 தொடக்கம் 10 மணி வரையில் இடம்பெற்றுள்ளது.

தற்போது பதவி வகித்துவரும் அதிபர் அடுத்த மாதம் தனது 60 வயது பூர்த்தியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் அவர் தற்பொழுதே ஓய்வு பெற்றுச்செல்லவேண்டும் என்று பிரதி அதிபர் உட்பட ஆசிரியர்கள் முயன்று வருவதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

unnamed-10-1

இதன்போது, அதிபர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்திருந்திருந்ததாக போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் இவரின் ஓய்வு தமக்கு பெரும் இழப்பு எனவும் மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, அதிபர் மாணவர்களின் உதவியுடன் உடுவில் வலயக்கல்வி பணிப்பாளர் சந்திரராஜாவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். எனினும் எதிர்வரும் 8ஆம் திகதி பாடசாலை மீண்டும் ஆரம்பமாக உள்ள நிலையில் அதிபர் பதவி விலகினால் எமது ஆர்ப்பாட்டம் தொடரும் என பாடசாலை மாணவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

unnamed-11-1

Related posts: