பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து ஆராய விசேட வேலைத்திட்டம்!

Saturday, May 4th, 2019

இரண்டாம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகளை எதிர்வரும் 06ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாடுமுழுவதும் உள்ள பாடசாலைகளில் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக தற்போது விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது

இதற்கமைய நாட்டில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் நேற்று(03) இராணுவத்தினரின் ஊடாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கொழும்பு ஆனந்தா கல்லூரி உட்பட சில பிரபல பாடசாலைகள் சோனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதன்போது கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமும் இதில் பங்கேற்றிருந்தார்.

Related posts: