பரீட்சை பெறுபேறு மீளாய்வுக்கு 35,000 விண்ணப்பங்கள்!

Monday, November 12th, 2018

இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை மீளாய்வு செய்வதற்கென 35,000 விண்ணப்பங்கள் பரீட்சைத் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்றிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெற்ற இப்பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் சுமார் 3,23,000 மாணவர்கள் தோற்றியிருந்தார்கள். இவர்களுள் 83,000 பேர் தமிழ் மொழி மூல மாணவர்களாவர். 2,40,000 பேர் சிங்கள மொழி மூல மாணவர்களாவர்.

ஒக்ரோபர் மாதம் 5 ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டு மேன்முறையீடுகள் ஒக்ரோபர் 20 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேன்முறையீடுகளை மாணவர்கள் சார்பாக பெற்றோர் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

மேன்முறையீடு தொடர்பான முடிவுகளை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இவ்வாரம் மீள் பரிசீலனை ஆரம்பமாகுமெனவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார்.

இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு சகல மாணவர்களும் கட்டாயம் தோற்ற வேண்டும் என்ற விதியை கல்வியமைச்சு நீக்கியுள்ளதுடன் அடுத்த வருடம் முதல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் நிதியுதவி பெறுவதற்கான தனியான பரீட்சையும் பிரபல பாடசாலைகளுக்கு அனுமதி பெறுவதற்கான தனியான பரீட்சையை நடத்துவது குறித்தும் கல்வியமைச்சு ஆலோசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: