பணிக்குத் திரும்பவும் – அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய!

Monday, September 18th, 2017

நாட்டின் பொருளாதார துறைக்கு நேரடியாக அழுத்தத்தை செலுத்தும் மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்வதற்கு  நாளை முதல் கடமைக்கு திரும்பும்படி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய  அனைத்து ஊழியர்களிடமும் கேட்டுள்ளார்.

மின்சார சபை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சிறந்த பினன்ணி இருப்பதாகவும்  அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய மின்சார சபை ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மின்சார சபை ஊழியர்களுக்கு அரசாங்கத்துடனோ அல்லது அமைச்சுடனோ அல்லது அமைச்சரோடோ எதுவித பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். எனவே இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தினங்களையும் விடுமுறை தினமாக கருதி அவற்றுக்கும் சம்பளத்தை வழங்கும்படி தாம் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய மேலும் தெரிவித்தார்.

Related posts: