பங்களாதேஷுக்கு எதிரான 2 – வது 20 ஓவர் போட்டி : நியூசிலாந்து அணி அபார வெற்றி!

Saturday, January 7th, 2017

பங்களாதேஷுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து – பங்களாதேஷ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி நேற்று பேஓவலில் நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 195 ஒட்டங்கள் குவித்தது. அந்த அணி வீரர் கோசின் முன்ரோ 52 பந்தில் சதம் அடித்து அசத்தினார். அவர் 101 ஓட்டங்கள் எடுத்து (54 பந்து 7 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டமிழந்தார்

பின்னர் 196 ஓட்டங்கள் இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணி நியூசிலாந்தின் அபார பந்து வீச்சில் திணறியது. அந்த அணி 18.1 ஓவரில் 148 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது . இதன் மூலம் நியூசிலாந்து அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முதல் போட்டியிலும் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி 8-ம் திகதி நடக்கிறது.

25col7314145204205_5121091_06012017_AFF_CMY

Related posts: