நெடுந்தீவு பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில்  சென்று களஆய்வு!

Tuesday, February 28th, 2017

நெடுந்தீவு பகுதி மக்கள் தற்போது எதிர்கொண்டுவரும் பிரச்சினை குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  முக்கியஸ்தர்கள் நேரில் சென்று ஆராய்ந்தறிந்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பல பிரதேசங்களுக்கும் சென்று கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போது குறித்த பகுதியில் தாம் போக்குவரத்து, மருத்துவ வசதி, தொழில்வாய்ப்பு இன்மை,  வாழ்வாதார உதவிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட  பிரச்சினைகளை  தாம்  நாளாந்தம் சந்தித்து வருவதாகவும் தமது பிரச்சினைகள் தொடர்பாக ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறும் மக்கள் வலியுறுத்தினர்.

மக்களது கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் குறித்த பிரச்சினைகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்  கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாக செயலாளர் முரளி ஆகியோர்  உடனிருந்தனர்.

16998754_624683701063827_7648345080059954218_n

16996306_624193291112868_2294093228422488767_n

16996098_624201454445385_5664290312483799448_n

16997867_624683781063819_1127073075438715354_n

16998916_624684187730445_35831884750262862_n

16999046_624683737730490_6439214571210881310_n

Related posts: