நுகர்வோர் நலன் கருதி அதிகார சபை விசேட நடவடிக்கை!

Thursday, December 29th, 2016

பண்டிகைக் காலப்பகுதியில் நுகர்வோர் நலன்கருதி நாட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் நலன்கருதி முற்றுகைகளை மேற்கொள்வதற்கு நுகர்வோர் சேவை அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டிசம்பர் மாதத்தில் இதுவரையில் 12 ஆயிரத்து 84 முற்றுகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்

குறிப்பிட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நுகர்வோரை தவறாக வழிநடத்துதல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, உணவுப் பொருட்களில் சேர்க்கப்படாத இரசாயனங்களை பயன்படுத்தியமை ஆகிய தவறுகளுக்காக இந்த வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்

46038decc8afa3647d9150b93ffc582c_XL

Related posts: