நிதி அமைச்சின் அறிவிப்பு!

Thursday, September 28th, 2017

 

2018ஆம் ஆண்டின் பாதீட்டுக்கான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைக்க முடியும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது

பொருளாதாரம், உற்பத்தி, விவசாய மற்றும் சேவை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த சகல தரப்பினர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்வாண்மையாளர்கள் உள்ளிட்டோர் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் சமர்ப்பிக்கமுடியும்.

இதேபோன்று பொதுமக்களும் தமது கருத்துக்கள் ஆலோசனைகளை முன்வைக்க முடியும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் தமது கருத்துக்களையும், யோசனைகளையும் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் தலைமைச் செயலகம், கொழும்பு கோட்டை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.

Related posts: