நாட்டின் நலன்களை மனதில் கொண்டே முடிவு எடுத்தேன்இ முழுப் பொறுப்பை ஏற்கிறேன் – டோனி பிளேர்!

Thursday, July 7th, 2016

பிரித்தானியா ஈராக் போரில் ஈடுபட்டது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட சில்காட் குழு அறிக்கை குறித்துதனதுகருத்தை வெளியிட்ட முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேர் எந்தவொரு விதிவிலக்கு அல்லது சாக்குப்போக்கோ இல்லாமல் தான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில் சதாம் ஹுசைனை விலக்குவது தான் சிறந்தது என்று நம்பியதாகத் தெரிவித்தார்.”தற்போது மத்திய கிழக்கு அல்லது உலகின் பிற பகுதிகளில் நடக்கும் தீவிரவாததிற்கு இந்த விவகாரம் காரணம் என்று நான் நம்பவில்லை” என்றார் பிளேர்.

மேலும் அவர் ”எல்லாவற்றுக்கும் மேலாக நான் நமது ராணுவ படையினருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.இறந்தவர்களுக்கும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் எதிர்காலத் தலைவர்கள் எனது அனுபவத்தில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள்” என்றார்.

சில்காட் விசாரணை முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இராணுவ நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்ற தனது முடிவு குறித்து யாரும் உடன்பட்டாலும் உடன்படாவிட்டாலும் அந்த முடிவுதான் நாட்டின் நலன்களை மனதில் வைத்து எடுத்ததாகவே தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

சில்காட் குழுவின் அறிக்கையில்இடோனி பிளேர்  பிரிட்டனின் கூட்டாளியான அமெரிக்காவுடன் தோளோடு தோள்நிற்கத்தான் ஈராக்கில் போருக்குச் சென்றார் ஆனால் அமெரிக்காவின் திட்டங்கள் பற்றி அப்போதைய அமெரிக்கஅதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் அவர் வற்புறுத்திக் கேட்டுத் தெளிவு பெறவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

இது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் டேவிட் கேமரன் எதிர்காலத்துக்கான பாடங்கள்கற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றார். ஈராக் போருக்கு ஆதரவாக வாக்களித்த அனைவரும் தங்கள் பங்கு பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் கேமரன்.

ஆனால் ஈராக் போரில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் ராணுவத்தினர் சிலரது குடும்பத்தினர் பிளேர் எடுத்த முடிவு குறித்துதங்கள் சினத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். போரில் கொல்லப்பட்ட ஒரு சிப்பாயின் சகோதரி பிளேரை ஒரு பயங்கரவாதி என்று வர்ணித்தார். வேறு பலர்இ பிளேர் தங்களை நேருக்கு நேர் பார்த்து ஏன் நாட்டை தவறாக வழிநடத்தினார் என்று விளக்கவேண்டும் என்று கூறினர்.

160706121524_tony_640x360_getty_nocredit

160706123940_antiwar_512x288_afp_nocredit

Related posts: