நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள்: உங்கள் அபிலாஷைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவேன் – திருமலை தமிழ் மக்களுக்கு டக்ளஸ் எம்பி அழைப்பு!

Saturday, October 12th, 2019

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பொட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபே ராஜபக்சவை அமோக வெற்றி பெறச் செய்து அந்த வெற்றியில் தமிழ்பேசும் மக்களும் பங்காளிகளாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன்  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டப் பணிமனையில் இடம்பெற்ற மாவட்ட முக்கியஸ்தர்களுடனான தொலைபேசிக் கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தமிழ்பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வு, வடகிழக்கு இளைஞர் யுவதிகளுக்கென ஒருஇலட்சம் வேலைவாய்ப்பு,

கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், கன்னியா பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு,  குடியிருப்போருக்கு காணி உரிமைப் பத்திரத்தினை பெற்றுக் கொடுத்தல்,

காணி அற்றோருக்கு காணிவழங்கும் திட்டத்தினை துரிதப்படுத்தல், பனைசார் தொழிலாளர்களுக்கான மேம்பாட்டுத் திட்டம், 

கடற்றொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிதனை மேம்படுத்தல் மற்றும் நலிந்த மக்களுக்கான வாழ்வாதார திட்டம் ஆகியவற்றை எம்மால் மட்டுமே துரிதகதியில் பெற்றுக் கொடுக்க முடியும் என தெரிவித்த அவர் அரசு எம்மை ஏமாற்றி விட்டதென எக்காலத்திலும் ஈ.பி.டி.பி கூறியதில்லை எனவே எம்மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள் நாம் உங்களின் அபிலாஷைகளுக்கு திர்வு பெற்றுத்தருவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: