துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு!

Friday, September 24th, 2021

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

வாழ்க்கைச்செலவு தொடர்பிலான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டம்  இன்றையதினம்  நிகழ்சிலை தொழில்நுட்பத்தின் மூலம் இடம்பெற்றது.

இதன்போது துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிக்குமாறு பிரதமர் அறிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்பில் கவனம் செலுத்தி இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் மற்றும் சுங்க பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு பிரதமர் இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இவ்வாறு விடுவிக்கப்படுகின்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை துரிதகதியில் சதொச மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் ஊடாக மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிற்கு அறிவித்துள்ளார்.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிக்கும் பொறுப்பை வர்த்தக அமைச்சு மற்றும் விவசாயத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஏற்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மக்களின் விடிவுக்காகவே நாம் கட்சியைப் பலப்படுத்தி வருகிறோம் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செய...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ளும் சமகால அரசியல் தொடர்பாக சூடான விவாதம் இன்று 03.11.2018 இரவு...
வடக்கின் வளங்களை அந்தப் பிரதேச கடற்றொழிலாளர்களே பூரணமாக பயன்படுத்த நடவடிக்கைமேற்கொள்ளப்படுகிறது – அம...