துடுப்பாட்டம்:  யாழ்.மாவட்ட ஏ அணி வெற்றி!

Monday, September 4th, 2017

இலங்கை கிரிக்­கெட் சபை நடத்­தும் 15 வய­துக்­குட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்டத் தொட­ரில் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் யாழ்ப்­பாண மாவட்ட ‘ஏ’ அணி வெற்றிபெற்­றது.

கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்­டங்­க­ளின் இணைந்த அணியை எதிர்த்து யாழ்ப்­பாண மாவட்ட ‘பி’ அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளின் இணைந்த அணி 24.3 பந்துப் பரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 74 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது.

அதி­க­பட்­ச­மாக பிர­விந்­தன் ஆட்­டம் இழக்­கா­மல் 21 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார். பந்­து­வீச்­சில் யாழ்ப்பாண மாவட்ட ‘ஏ ’அணி­யின் சார்­பில் ஜோனந்­தன், சதுர்­சன் தலா 4 இலங்­கு­க­ளைக் கைப்பற்றி­னார்.

75 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பாண மாவட்ட ‘ஏ’ அணி 19.2 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 3 இலக்­கு­களை இழந்து 78 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. நிகேஸ் ஆட்­ட­மி­ழக்­கா­மல் 21 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.

Related posts: