திங்கள்முதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்கள் – லங்கா சதொச நிறுவனத் தலைவர் நுசாத் பெரேரா அறிவிப்பு!

Saturday, May 9th, 2020

நுகர்வோரின் நன்மை கருதி எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனத் தலைவர் நுசாத் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் லங்கா சதொச நிறுவனத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திறக்கப்படும் சதோச நிறுவனங்களில் சமூக இடைவெளியை பேணுவது உள்ளிட்ட சுகாதார தரப்பினரது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் தமது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts: