தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்க மறுப்பதாக வட மாகாண பட்டதாரிகள் கவலை தெரிவிப்பு!

Tuesday, March 21st, 2017

தம்மீது ஏற்பட்ட   நம்பிக்கையீனம் காரணமாக வேலைவாய்ப்பு வழங்க தனியார் நிறுவனங்கள்  மறுப்பு  தெரிவிப்பதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள்   கவலை வெளியிட்டுள்ளனர்.

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கினால் அரச வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் பட்சத்தில்  அவர்கள்   தனியார்   நிறுவனங்களை  விட்டு வெளியேறுவுதாக  குறித்த  நிறுவுனங்கள் தெரிவிப்பதாகவும்  அவர்கள்   சுட்டிக்காட்டியுள்ளனர்.

வேலைவாய்ப்பை வழங்குமாறு  வலியுறுத்தி வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று  21 ஆவது நாளாக  கவனயீர்ப்பு போராட்டத்தில்   ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,    பல்கலைக்கழக  கற்கைநெறி தொழில்வாய்ப்பை பெற்றுத்தரவில்லை என்றால் எதற்காக இந்த கல்வி  எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  பட்டதாரிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில்  பல எதிர்பார்ப்புக்களுடன் கல்விகற்று வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு  வீதிகளில் இறங்கி போராடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தகவனயீர்ப்பு போராட்டத்தில்  நூற்றிற்கும் அதிகமான   பட்டதாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இவ்வாறாயினும்  வடமாகாணத்தில்  உள்ள  பல அரச திணைக்களங்களில்   பதவி வெற்றிடங்கள்  காணப்படும் நிலையில்,  வடமாகாணத்தில்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள்  பட்டப்படிப்பை  நிறைவுசெய்யத நிலையில்  வேலைவாய்ப்பு    இன்றி   இருக்கின்றனமை குறிப்பிடத்தக்கது.

Related posts: