ஜெயவர்தனவுக்கு மத்யூஸ் கொடுத்த விளக்கம்!

Tuesday, May 28th, 2019

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹெல ஜெயவர்தன முன்வைத்த குற்றச்சாட்டிற்கு இலங்கை ஆல் ரவுண்டர் மத்யூஸ் பதிலளித்துள்ளார்

முன்னதாக தொலைகாட்சிக்கு நேர்காணலில் மேத்யூஸ் தொடர்பில் மஹேல ஜெயவர்தன தெரிவிக்கையில், நாம் மேத்யூஸிற்கு, அரசியலை கிரிக்கெட்டுக்குள் கொண்டுவருவதற்கு ஒருபோதும் இடமளிக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கியிருந்தோம். ஆனால், அணி எடுக்கவேண்டிய முடிவுகளை வெளியில் உள்ளவர்களை எடுப்பதற்கு மேத்யூஸ் அனுமதித்தார். இப்போது அவருக்கு எதிராக நான் முன்வைக்கும் ஒரே ஒரு குற்றச்சாட்டு இதுதான்.

இந்த உலகக்கோப்பை பொருத்தவரை மேத்யூஸ் தான் இலங்கை அணியை வழிநடத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் விட்டுக்கொடுத்துவிட்டார். அதற்கு காரணம் அவரே தான் என கூறினார்.

இதற்கு மேத்யூஸ் ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ளார், அதில் அனைவரது அக்கறைக்கும் எனது நன்றிகள். பலர் தங்களுடைய கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். இதில் மஹேல ஜெயவர்தனவும் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

இதில் சில கருத்துகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தாலும், என்னுடைய முழு கவனமும் தற்போது உலகக்கோப்பையின் மீது உள்ளது. அதேநேரம், இவ்வாறான முக்கியமான தருணத்தில் மஹலே ஜெயவர்தன, தன்னுடைய கிரிக்கெட் அனுபவம் மற்றும் ஊக்குவிப்பினை இலங்கை அணிக்கு வழங்கி உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts: