ஜனாதிபதி  அவசர பணிப்புரை!

Friday, May 20th, 2016

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் “நிதியை” பிரச்சினையாக்கிக் கொள்ளாது அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர பணிப்புரையை விடுத்தார்.

வெள்ளத்தால் கொழும்பு மாவட்ட மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், இம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி. திஸாநாயக ஆகியோரை ஜனாதிபதி இணைப்பாளர்களாகவும் நியமித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாஸஸ் தளத்தில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தைகளின் போதே ஜனாதிபதியினால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இப் பேச்சுவார்த்தைகளின் போது வெள்ளத்தால் பாதிக்கப்படுள்ள பிரதேச மக்களை மீட்பது, இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பது, உணவு வழங்குவது மற்றும் அவர்களுக்கான நலன்புரி விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக தற்போது பயன்படுத்தப்படும் படகுகளுக்கு மேலதிகமான படகுகளை பயன்படுத்துமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி இவ் விடயத்தில் “நிதியை” ஒரு பிரச்சினையாக்கிக் கொள்ளாமல் மக்களுக்கு தேவையான நலன்புரி நடவடிக்கைகளை இடைநிறுத்தாது தொடர்ந்து முன்னெடுக்குமாறும் மாவட்ட செயலாளருக்கும் ஆலோசனை வழங்கினார்.

அத்தோடு இடம்பெயர்ந்த மக்களின் சுகாதாரம் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துமாறும் அதற்குரிய அதிகாரிகளை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, வெள்ளம் வடிந்து போகும் வரையில் தமது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுமாறும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்றும் ஆலோசனை விடுத்தார்.

மழை வெள்ளத்தால் கொழும்பு மாவட்ட மக்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சர்களான சுசில் பிரேம் ஜயந்த மற்றும் எஸ்.பி. திஸாநாயக ஆகியோரை ஜனாதிபதி இணைப்பாளர்களாக நியமித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையங்களை ஏற்படுத்துவதற்கும் ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, ஒவ்வொரு தினமும் காலையில் மாவட்ட செயலாளரின் தலைமையில் அரசியலை சார்ந்தோரின் பங்களிப்புடன் அரச அதிகாரிகள் கலந்து பேசி அனர்த்த நிலைமைகள் தொடர்பாக கலந்தாலோசித்து அதற்கு தீரவுகளை காண்பதற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

அதேவேளை வெள்ளம் வழிந்தோடிய பின்னர் மக்கள் எதிர்நோக்கும் சுகாதார பிரச்சினைகளிலிருந்து அவர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு விசேட திட்டமொன்றை தயாரிக்குமாறும் சுகாதார அமைச்சுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

அனர்த்த நிலைமைகள் தொடர்பாக சரியான தகவல்களை வழங்குவது ஊடகங்களில் கடப்பாடாகும். முறைப்பாடுகளை மட்டுமன்றி அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் தகவல்களை வெளியிடுமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

Related posts: