சீனாவில் மீண்டும் புதிதாக 78 பேர் அடையாளம்!

Tuesday, March 24th, 2020

சீனாவில் கொரோன தொற்றுக்கு உள்ளான 78 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டில் மீண்டும் இந்த தொற்று தீவிரமடைவதற்கான அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனினும் இதில் 74 பேர் வெளிநாடுகளில் இந்த தொற்றுக்கு உள்ளாகி சீனா சென்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஒருவாரத்திற்கு பின்னர் வுஹான் நகரில் ஒருவர் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

கொரோனா எனப்படும் கொவிட் 19 தொற்று கடந்த வருடம் டிசம்பர் சீனாவின் வுபேய் பிராந்தியாத்தின் வுஹான் நகரில் பரவ ஆரம்பித்தது.

இதன் காரணமாக சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து 277 பேர் இந்த தொற்றால் பலியாகியுள்ளதுடன் அங்கு 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கும் செல்லும்; அந்த நாட்டின் பிரஜைகளுக்கு இந்த தொற்று காணப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இரண்டாவது எலிசபத் மகராணி பக்கிங்ஹாம் மாளிகையில் (டிரஉமiபொயஅ pயடயஉந) இருந்து வெளியேறியுள்ளார்.

குறித்த மாளிகையின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இரண்டாவது எலிசபத் மகாராணி, வின்ட்சர்( றுiனௌழச) மாளிகைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவரின் அனைத்து உத்தியோகபூர்வ கடமைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் தொற்றுக்கு உள்ளான பக்கிங்ஹாம் மாளிகையின் பணியாளர் மகாராணியை நெருங்கவில்லை எனவும் அவருடன் பணிபுரிந்த ஏனைய பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை 195 நாடுகளில் பரவியுள்ள கொவிட் 19 தொற்றால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 558 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 3 லட்சத்து 81 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 429 பேர் இந்த தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: