சாவகச்சேரி தற்கொலை அங்கி 10 வருடங்கள் பழமை வாய்ந்தது!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடி பொருட்கள் புலிகளினால் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். ஊடகங்களுக்கு விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் உற்பத்தி செய்யப்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் இந்த வெடிபொருட்கள் தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு பிரிவு தற்பொழுது விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முன்னாள் புலி உறுப்பினர் என தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர், கொழும்பு தலைமையகத்தில் தடுத்து வைத்து அவர் விசாரணைக்கு உட்படுத்தபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட நபரின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து பெறப்பட்ட சந்தேகத்துக்கிடமான இலக்கங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|