சண்டிலிப்பாய் இந்து கிண்ணத்தைத் தனதாக்கியது!

வலிகாமம் கல்விவலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் 20 வயதுப் பெண்கள் பிரிவில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.
உடுவில் மகளிர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதின.
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி 17:16 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியாட்டத்திலும் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியின் ஆதிக்கம் தொடர ஆட்ட நேர முடிவில் அந்த அணி 31:28 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.
Related posts:
விம்பிள்டனில் பதினொராவது முறையாக அரை இறுதிக்கு சென்ற பெடரர்!
"கிரிக்கெட் ஏயிட்" கிரிக்கெட் போட்டி!
இலங்கை அணியின் நிலைமை திருப்திகரமாக உள்ளது - பலமான இலங்கை அணியை உருவாக்குவதே எமது நோக்கம் - விளையா...
|
|