கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு: சர்வதேச சுகாதார அமைப்பினால் அவசரநிலை பிரகடனம்!..

Friday, January 31st, 2020

புதிய கொரோனா வைரஸ் சீனாவுக்கு வெளியே உலக நாடுகளில் பரவியுள்ளதால் சர்வதேச சுகாதார அமைப்பினால் சர்வதேச சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் வூஹாங் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் இரு மாகாணங்கள் உட்பட உலகின் 15 நாடுகளுக்கும் பரவத் தொடங்கி உள்ளது. இது உயிருக்கு ஆபத்தான கொடிய நோயாக இருப்பதால் உலகின் பலநாடுகளிலும் பீதி நிலவுகிறது. அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேஷியா, பாக்., தாய்லாந்து, மற்றும் ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் பரவத் தொடங்கியதையடுத்து உலக சுகாதார அமைப்பு, சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகனப்படுத்தி உள்ளது.

சீனா தவிர்த்து 18 உலக நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு முன் 5 முறை சர்வதேச அளவில் 5 முறை, உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது.

2009 – எச்1என்1(H1N1)

2014 – போலியோ

2014 – எபோலா (வட ஆப்ரிக்கா)

2016 – ஜிக்கா

2019 – எபோலா (காங்கோ)

Related posts: