கொரோனா வைரஸ் : ஜனாதிபதியிடம் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

Monday, March 23rd, 2020

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறு குற்றங்களுக்காகவும், அபராத தொகையை செலுத்த இயலாமலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறு கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உலகெங்கிலும் பல நாடுகள் செயற்படுவதை மும்திரியாக கொண்டு செயற்படுமாறு, அந்த அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

“கொரோனா தொற்று சந்தேகத்தில் அனுராதபுரா சிறையில் உள்ள ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பலரை அனுராதபுர வைத்தியசாலையில் காணக்கூடியதாக உள்ளது, ஆகவே விடுவிக்கக்கூடியவர்களை எவ்வாறான நிபந்தனைகளை விதித்தேனும் விடுவியுங்கள்.

சிறைகுள் கொரோனா வைரஸ் பரவினால் அது ஒரு பேரழிவாகவே மாறும்” என அந்த அமைப்பின் பொது செயலாளர் சுதீஷ் நந்திமல் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் தமது அமைப்பு விடுத்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதுவரை பதிலளிக்கவில்லை என்பது வருத்தமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்

Related posts: