கொரோனா தொற்று: அபுதாபி நகரில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது – வெளிவிவகார அமைச்சு!

அபுதாபி நகரில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காரியாலயத்தில் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதன் காரணமாக இவ்வாறு குறித்த காரியாலயம் மூடப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இரண்டு தினங்களுக்கு இவ்வாறு மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் பின்வரும் இணையத்தளம் மூலம் slemb.abudhabi@mfa.gov.lk அல்லது இலவச அழைப்பு இலக்கமான 800 119 119 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு சேவையினை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மகாராணியின் தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்தால் ஒரு கோடி இலங்கை ரூபாய் ஊதியம்!
இலங்கை - நியூசிலாந்து போட்டிக்கான கால அட்டவணை!
புலிகள் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தவில்லை - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்!
|
|