குடிநீர் கிணற்றின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு – வேலணை பிரதேச சபையின் தவிசாளர்!

Thursday, February 7th, 2019

மண்கும்பான் சாட்டி வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான குடிநீர் கிணற்றின் நீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்தார்.

மேற்படி கிணற்றிலிருந்தே பிரதேச சபை நீர் பெற்று விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இந்த நிலையில் விசமிகளால் இரு வாரங்களுக்கு முன்னர் கழிவு ஒயில் ஊற்றப்பட்டது.

இது குறித்து பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டதுடன் கிணற்றினை இறைத்து துப்புரவாக்கினோம். என பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மேற்படி குடிநீரில் எண்ணெய் கலந்துள்ளதா குடிநீர் பாவனைக்கு பயன்படுத்த முடியுமா என அறிந்து கொள்ளுமுகமாக பரிசோதனைக்கு நீர் மாதிரியை அனுப்பியுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

இதேவேளை குடிநீர் கிணற்றில் கழிவு ஒயில் வீசிய விசமிகள் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts:

குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவு தூபிக்கு  ஈ.பி.டி.பியின் உயர் மட்ட முக்கியஸ்தர்கள்...
சங்கமன் கண்டி இறங்குதுறையில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலில் சர்வதேசக் குழு ஆய்வு!
ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் - ஜன...