‘கிராமத்துடன் உரையாடல்’ – எதிர்வரும் ஞயிரன்று யாழ்ப்பாணம் வருகின்றார் ஜனாதிபதி!

‘கிராமத்துடன் உரையாடல்’ வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவியேற்ற பின் கிராமிய அபிவிருத்தி மற்றும் கிராமிய மக்களின் பிரச்சனைகளை நேரடியாக சென்று மக்களிடம் இருந்து கருத்துக்களை அறிந்து கொள்ளும் முகமாக ‘கிராமத்துடன் உரையாடல்’ வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துவருகின்றார்.
குறித்த நிகழ்ச்சி திட்டம் தென்பகுதியின் பல மாவட்டங்களிலும் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதன் ஓர் அங்கமாக வட மாகாணத்திலும் அந்நிகழ்ச்சி திட்டத்தை முன்னெடுக்கும் வகையிலேயே இந்த வருகை அமைந்துள்ளது.
இதனடிப்படையில் வடக்கு மாகாணத்திற்கான அவரது பயணத்தில் எதிர்வரும் 3 ஆம் திகதி வவுனியா மாவட்டத்திற்கு ஜனாதிபதி வருகைதரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 4 ஆம் திகதி ‘கிராமத்துடன் உரையாடல்’ வேலைத்திட்டத்தினை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச முன்னெடுத்க்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|