ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த டிவில்லியர்ஸ்!

Saturday, October 21st, 2017

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பல சாதனைகளை அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் நிகழ்த்தியுள்ளார்.தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே வென்ற நிலையில், நேற்றைய போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் 121 பந்துகளில் 176 ஓட்டங்களை விளாசினார்.சரியாக 68 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்த டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிவேக சதம் அடித்த டாப்-10 இடங்களில் 8வது முறையாக நுழைந்து அசத்தியுள்ளார்.மேலும், இப்போட்டியில் 7 சிக்சர்கள் அடித்த டிவில்லியர்ஸ் ஒருநாள் அரங்கில் 201 சிக்சர்களுடன் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.இதோடு, ஒருநாள் அரங்கில் டிவில்லியர்ஸ் அடித்த 25 சதங்களிலும் அவரது ஸ்டிரைக் ரேட் 100க்கும் மேல் தான் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

Related posts: