ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் தேவை இருந்ததை மறுக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, May 23rd, 2020

இலங்கையில் ஒரு காலத்தில் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய தேவை இருந்தது என்பதை மறுக்கவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காலப்போக்கில் அதிலிருந்து விலக வேண்டிய சூழல் மாற்றம் சர்வதேசத்திலும் உள்ளூரிலும் ஏற்பட்டது என்பதே யதார்த்தம் என்றும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் இன்று (23) கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

காலத்தின் தேவை கருதி ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் சகோதரப் படுகொலைகளாக மாறிய நிலையில் சர்தேச சூழலிலும் மாற்றம் ஏற்பட்டது.

அதேவேளை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக பொன்னான வாய்ப்பும் தமிழ் மக்களுக்கு கிடைத்தது. ஆனால் அதனை கையிலெடுத்த தரப்புக்கள் சரியாக பயன்படுத்தவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், கடந்தகால தலைமைகள் தொடர்ச்சியாக கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டமையினாலேயே எமது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: