உழவு இயந்திரத்தை மோதித்தள்ளியது யாழ்தேவி!

Saturday, May 4th, 2019

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்தேவி கடுகதி புகையிரதம் உமையாள்புரம் பகுதியில் வைத்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

புகையிரதம், உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதாலேயே குறித்த விபத்து நேர்ந்தள்ளது.

விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்துள்ளதுடன், சாரதி எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பியுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: