ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் தன்னார்வமாக குருதிக்கொடை!

Wednesday, November 10th, 2021

யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் தன்னார்வமாக இன்றையதினம் குருதிக்கொடையளித்திருந்தனர்.இந்நிலையில் யாழ் மாவட்டத்திலேற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இளைஞர் யுவதிகள் முன்வந்து குருதித் தேவைக்காக எதிர்பார்த்திருக்கும் உறவுகளின் நலன் கருதி வழங்க முன்வருமாறு வைத்தியசாலையின் குருதி தொடர்பான வைத்திய நிபுணர் நில்மினி கெட்டியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.அத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அதிகளவான குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதை நிவர்த்தி செய்ய வேண்டியது ஆரோக்கியமுள்ள அனைவரதும் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் யாழ் போதனா வைத்தியசாலையானது அதன் தேவைக்கு மட்டுமல்லாது மாவட்டத்தின் பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளின் அவசர தேவைகளுக்கு தேவையான குருதியையும் வழங்கவேண்டியுள்ளதால் குறித்த வங்கிக்கு அதிகளவான இரத்தம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்த தினத்தை மன்னிட்டு இன்று பலர் தன்னார்வமாக குருதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: