இளைஞர்களின் வளர்ச்சியும் தீர்க்கமான சிந்தனையும் தான் எதிர் காலத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் – ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

இளைஞர்களின் வளர்ச்சியும் தீர்க்கமான சிந்தனையும் தான் எதிர் காலத்தில் நல்ல ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் எனவே இளைஞர் யுவதிகளின் வளர்ச்சி பணியில் எங்களது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் எப்பொழுதும் அக்கறையுடன் செயற்படுவதாக இருக்கிறார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலரும் மாகாண சபை உறுப்பினருமான வை தவநாதன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவடத்தில் கட்சியின் இளைஞர் அமைப்பு ஒன்றை கடந்த ஞாயிற்று கிழமை கட்சியின் கிளிநொச்சி செயலகத்தில் அக்குரர்ப்பணம் செய்து வைக்கபட்டது இதன் பொது இளைஞர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் பொது அவர் இவ்வாறு தெரிவித்தார்
2015ம் ஆண்டு முன்னர் இந்த பிரதேசத்திலுள்ள பல இளைஞர் யுவதிகள் எங்கள் கட்சின் ஊடாக பல்வேறு தொழில் வாய்ப்புகளை பெற்று இருகின்றனர் இங்குள்ள இளைஞர் யுவதிகள் எங்கள் பிரதேசத்தில் உள்ள வேலை வாய்ப்புகளை எமது கட்சி கடந்த காலங்களில் செய்து இருந்தது இப்பொழுது தென் இலங்கை மாவட்டகளை சேர்த்தவர்கள் எமது பிரதேச தொழில் வாய்ப்புகளில் திணிக்க படுவதாக கருத்து பரவலாக முன்வைக்க பட்டு வருகிறது அதிகாரத்தை பயனப்டுத்துபவர்களாக இருப்பவர்களால் இதனை தடுக்கவும் முடியாதுள்ளமை எமது பிரதேசத்திற்கு பின்னைடைவாக பார்க்க வேண்டியுள்ளது எனவே அநீதிகளை தட்டி கேட்க முடியாத நாதியற்ற மக்கள் ஆக எமது மக்களின் நிலைமை மாறியிருப்பது கவலை அளிப்பதாகவும் மாவட்ட அமைப்பாளர் வை தவநாதன் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|