இலங்கை மீதான இராணுவ வர்த்தக கட்டுப்பாடு தளர்வு!

Sunday, May 8th, 2016

நீண்டகாலமாக இலங்கை மீது அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த இராணுவ வர்த்தக கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் இம்மாதம் 04ம் திகதி முதல் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பாதுகாப்பு வர்த்தக பிரிவினால் தளர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது இலங்கையுடன் இராணுவ உபகரண கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட அமெரிக்கா இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இலங்கைக்கு இராணுவ உபகரணங்கள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தி இருந்தது.

எனினும் மிதிவெடி அகற்றல், இடர் முகாமைத்துவ உதவிகள், வான் மற்றும் கடல் பாதுகாப்பு சேவைகளை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: