இலங்கையில் 1, 683 தொழுநோயாளர்கள் இனங்காணல்!

Friday, February 8th, 2019

நாட்டில் கடந்த வருடத்தில் மாத்திரம் ஆயிரத்து 683 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டுத்திட்டப் பணிப்பாளர் வைத்தியர் சம்பா ஜே.அலுத்வீர சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் மேல் மாகாணத்தில் புதிதாக 41 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட அதேவேளை மேல் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 691 ஆகும். மேலும் 6 மாதங்களுக்குள் நோய் அறிகுறிகள் தென்பட்ட 30 சதவீதத்தினர் சிகிச்சை பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே தொழுநோய்க்கான ஆரம்ப அறிகுறி தென்படின் உரிய முறையில் சிகிச்சை பெற்றுக்கொண்டால் நோயைக் குணப்படுத்த முடியுமென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: